கேவி குப்பம்: அண்ணனை கழுத்து இறுக்கி கொலை செய்த தம்பி கைது
வேலூர் சலவன்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர்கள் சண்முகம் சரஸ்வதி தம்பதியர். இவர்களுக்கு மோகன் (30), பாஸ்கர் (25) என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மோகனுக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை உள்ள நிலையில் இளைய மகன் பாஸ்கருக்கு திருமணமாகவில்லை. பாஸ்கர் பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வீட்டிலிருந்த படி பணி செய்து வரும் நிலையில், மதுவுக்கு அடிமையான மோகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவு (08. 10. 2024) வீட்டிற்கு மது போதையில் வந்த மோகன் தாய் மற்றும் மனைவியை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தடுக்க சென்ற பாஸ்கரை கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது பாஸ்கர், மோகனின் கழுத்தை இறுக்கியுள்ளார். அதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அண்ணனை கொலை செய்த பட்டதாரி இளைஞர் பாஸ்கரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.