காட்பாடி - Katpadi

20 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

20 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

திருவண்ணாமலை மாவட்டம் மேல்முடியனுர் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் பி. டெக் மூன்றாம் ஆண்டு பயிலும் தமிழரசன் (20) கடந்த 11 தேதி அம்மாபாளையம் பகுதியில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்து ராணிப்பேட்டையில் உள்ள (சிஎம்சி) தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (அக் 17) நள்ளிரவு மூளை சாவு அடைந்துள்ளார். இதனை அடுத்து இவரது இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. கல்லீரல் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனைக்கும், சிறுநீரகம் சிஎம்சி ராணிப்பேட்டை மற்றும் சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கும், இதயம் சென்னை எம் ஜி எம் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా