வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த 2-நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில், அதிகாலை பெய்த மழையின் காரணமாக வேலூரில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தது.
இந்த நிலையில் தற்போது, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள 50-அடி உயர மிகப்பெரிய மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்ததில், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2-கார் உள்பட 5-ந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நசுங்கி சேதமானது.
இதுகுறித்து, வேலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்து, சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறபடுத்தி கார் மற்றும் இருச்சக்கர வாகனங்களை மீட்டனர்.
இதனால் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.