காட்பாடி: ரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சா பறிமுதல்

69பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் பூனையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ரயில் சந்திப்பு வந்தடைந்த போது காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது s6 பெட்டியில் கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளை போலீசார் சோதனை செய்தபோது அதில் 18 கிலோ கஞ்சா இருந்து தெரிந்தது. பின்னர் அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? எங்கிருந்து கடத்திவரப்பட்டது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற பல்வேறு குணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் பத்து லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி