பள்ளிக்கல்வியில் சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசுப் பள்ளிகளில் ரூ.65 கோடியில் திறன்மிகு வகுப்பறைகளும், ரூ.56 கோடியில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கும் தரம் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.