வேலூர்: ஆட்டோ ஓட்டுனருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கைகலப்பு

51பார்த்தது
வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து வேலூர் ஆட்சியர் அலுவலகம் செல்வதற்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சேதுராமன் உள்ளிட்ட நான்கு பேர் ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளனர். 

ஆட்டோவின் ஓட்டுநர் மது போதையில் தாறுமாறாக ஓட்டியதால் அச்சமடைந்த மாற்றுத்திறனாளிகள் ஆட்டோவை நிறுத்தி தங்களை இறக்கி விடுமாறு கேட்டுள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தாமல் தகாத வார்த்தையால் மாற்றுத்திறனாளிகளை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வேலூர் அருகே கருகம்பத்தூர் என்ற இடத்தில் ஆட்டோவை ஓட்டுனர் நிறுத்தியுள்ளார். 

அப்போது மாற்றுதிறனாளிகளுக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆட்டோ ஓட்டுனரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் வேறொரு ஆட்டோ மூலம் மாற்றுத்திறனாளிகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி