தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை வாசித்து வரும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வியை நனவாக்கும் வகையில் தேவையின் அடிப்படையில் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 2025-26 கல்வியாண்டில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2500 கோடிக்கு பல்வேறு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை அரசு உறுதிசெய்யும்” என்றார்.