250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், 5,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் வகையில், 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்றார். சேலத்தில் ஏற்கனவே மத்திய அரசின் இரும்பு சார்ந்த தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் தொழிற்பூங்கா திருச்சியில் அமைகிறது.