நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற உள்ள மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத நான்கு சட்ட தொகுப்பு மசோதாக்களை கைவிட வலியுறுத்தியும், பாஜக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தொழிலாளர் விரோத சட்ட மசோதா நகல் கிழிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நகலை கிழித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.