ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும் வகையில் புதிய தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 20,000 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் புதிய காலணி தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்றார்.