வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7: 30 அளவில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மிதிலேஷ் குமார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு மது போதையில் வந்த குடிமகன் ஒருவர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார். பின்னர் அவர் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை திடீரென வழிமறித்து பேருந்தில் ஏற முயற்சித்துள்ளார்.
குடிபோதையில் உள்ளதால் பேருந்து நடத்துனர் அவரை பேருந்தில் ஏ விடாமல் கீழே இறக்க முயற்சித்து கழுத்தை பிடித்து தள்ளியுள்ளார். அப்பொழுது பேருந்து நடத்துநரை குடி போதை ஆசாமி அடிக்க கை ஓங்கி தகாத வார்த்தைகளால் பேசினார். இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் அவரிடம் பேசி சாமதானம் செய்து அனுப்பி வைத்தனர். மது போதையில் இருந்த அந்த நபர் சாலையின் நடுவே தள்ளாடியவாறு சென்றார். இதனால் முத்து பேருந்து நிறுத்தத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.