தமிழக பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துவரும் நிலையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். அதன்படி, 40 வயதுக்கு மேல் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும் என்றும், இணையம் சார்ந்த 1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதேபோல் நகர்புற டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இருச்சக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.