திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 36 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் (2025) ஆண்டை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர பேரணியை கொடியாசைத்து துவக்கி வைத்தார்.
இந்தப் பேரணி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தமலேரிமுத்தூர் சென்று அங்கிருந்து திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் உள்ள காந்தி சிலை வரை சென்று முடிவடைந்தது.
மேலும் திருப்பத்தூர் மாவட்ட போலீசார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தினர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
இந்த பேரணி 18 வயதுக்கு உட்பட்ட சிறார் எவரும் வாகனத்தை ஓட்டக்கூடாது அவ்வாறு ஓட்டினால் 25 ஆயிரம் மற்றும் மூன்று வருடம் காலம் வரை தண்டனை அவருடைய பெற்றோர்களுக்கு அளிக்க நேரிடும்
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வரும் போது நான்கு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் கூட தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் வாகனம் ஓட்டுபவரும் கட்டாயம் தலைகாசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.