மத்திய அரசு தாக்கல் செய்த வக்ஃப் மசோதா சட்ட திருத்த குழு அறிக்கையை கண்டித்தும், அதனை ரத்து செய்யக் கோரியும், வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தும், பாஜக அரசை கண்டித்தும் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே SDPI கட்சியினர் வக்ஃப் திருத்த சட்டத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். SDPI போராட்டத்தின் போது அவ்வழியாக வந்த இறுதி ஊர்வலத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் கோஷத்தை நிறுத்தினர். அதே சமயம் SDPI கட்சியினரின் ஆர்ப்பாட்டத்திற்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இறுதி ஊர்வலம் சென்றவர்கள் மேளம் அடிப்பதை நிறுத்தி அமைதியாக இறுதி ஊர்வலம் சென்று "மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கினர்"