பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி?

நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் பூரி ஜெகன்நாத் 'போக்கிரி, பிசினஸ்மேன், டெம்பர், லைகர், டபுள் இஸ்மார்ட்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி இயக்குனர் பூரி ஜெகன்நாத்திடம் கதை கேட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. விரைவில் இவர்களது கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.