சபாநாயகர் அப்பாவு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "உட்கட்சிப் பிரச்சினைகளைத் திசைதிருப்ப நினைத்தவர்கள், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்! கடந்த ஆட்சிக்காலத்தைப் போல் அல்லாமல், நடுநிலைமையோடு பேரவையை வழிநடத்திடும் பேரவைத் தலைவர் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, எதிர்க்கட்சியின் தீர்மானத்தைப் பேரவை நிராகரித்தது!" என்று பதிவிட்டுள்ளார்.