உ.பி: ஜான்சியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது, பாஜக தலைவர் ஒருவர் பெண்ணின் ஆடையை கிழித்தெறிந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கங்காபர் வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத் தலைவர் அனுராக் அகர்வால், ஒரு பட்டியல் சாதிப் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து மிரட்டியுள்ளார். இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 24 மணிநேரம் ஆகியும் வழக்குப்பதிவு செய்யாத ஜான்சி காவல் நிலைய அதிகாரிகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.