சென்னையில் ரவுடிகள் அருண்குமார், பட்டபை சுரேஷ் ஆகிய இருவரும், சுக்கு காப்பி சுரேஷ் என்ற மற்றொரு ரவுடியால் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை செய்யப்பட்ட அருண்குமார் மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகளும், படப்பை சுரேஷ் மீது சென்னை, திருவள்ளூர் காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும், சுக்கு காப்பி சுரேஷ் மீது சென்னை, வேலூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் கொலை உட்பட 17 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.