கர்நாடகா மாநிலம் சாமராஜநகர பகுதியைச் சேர்ந்த தம்பதி பரசிவமூர்த்தி - மம்தா. திருமணத்திற்கு முன்பு இருந்தே பரசிவமூர்த்திக்கு சொட்டை தலை இருந்துள்ளது. ஆனால் திருமணம் ஆனதில் இருந்து கணவனின் சொட்டை தலையை மனைவி கிண்டல் செய்துள்ளார். 'உன் கூட வெளியில் போகவே எனக்கு அவமானமாக இருக்கு' என பல முறை கணவனை குத்திக் காட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பரசிவமூர்த்தி தனது சாவுக்கு மனைவிதான் காரணம் என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.