அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாளை முன்னிட்டு 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டசாமியின் 193வது பிறந்த நாள் விழா 04.03.2025 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.