மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒரு தற்சார்பற்ற சமூக தணிக்கை சங்கத்தினை தோற்றுவித்து 2012-13 ஆம் ஆண்டு முதல் சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. இச்சங்கத்தின் கீழ் சமூக தணிக்கையினை திட்டத்தின் பயனாளிகளே மேற்கொண்டு வருகின்றனர். இந்த சமூக தணிக்கையினை முறையாக நடத்துவதிலும், குறைகள் கண்டறிவதிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கூறியுள்ளார்.