*நாட்றம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை சேமிப்பு கிடங்கில் தீ வைத்த மர்ம நபர்கள்! *
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சந்தை தெருப்பகுதியில் நாட்றம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் இருந்து சேமிக்கப்படும் குப்பைகளை இங்குதான் சேமித்து வைக்கின்றனர்.
இந்த நிலையில் அங்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக இந்த சேமிப்பு கிடங்கில் தீ தக தகவென எரிந்து விண்ணை முட்டும் அளவிற்கான புகை மட்டும் காணப்பட்டது.
மேலும் இதுவரை பேரூராட்சி அதிகாரிகளும் இதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு சுவாச கோளாறு மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகினர்.
இதன் காரணமாக தீயை அணைக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.