கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

செங்கம்: மாணவர்களுக்கான கலைத்திருவிழா

செங்கம்: மாணவர்களுக்கான கலைத்திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு வட்டத்திற்க்குட்பட்ட அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான கலைத்திருவிழா நிகழ்ச்சியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், இரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, மு. ஒன்றிய கழக செயலாளர் ஜெயராமன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொன் தனுசு, ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர்கள் சத்யா வெங்கடேசன், முத்துமாறன், ஒன்றிய துணை செயலாளர் கல்பனா ஜோதி, மாவட்ட பிரதிநிதி ஜோதி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் தண்டராம்பட்டு ரவி, சசதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முருகேசன், நகர செயலாளர் சுப்பிரமணி, ஆசிரியர்கள் கார்த்திக், லட்சுமிகாந்தன், சாரங்கபாணி, இராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
Nov 04, 2024, 16:11 IST/செங்கம்
செங்கம்

சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Nov 04, 2024, 16:11 IST
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கேயுள்ள அணை சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்த அணை மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் இந்த அணைக்கு ஏராளமான பொதுமக்கள் வருவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தொடா் விடுமுறை என்பதால் திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல ஆயிரம் போ் அணையில் குவிந்தனா். அணையின் எழில்மிகு தோற்றம், முதலைப் பண்ணை, சிறுவா் பூங்கா ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தனா். மேலும், சிறுவா்கள், இளைஞா்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்தனா். சாத்தனூா் அணையின் மதகுகள் வழியாக தென்பெண்ண ஆற்றில் கடந்த சில நாள்களாக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் பாா்த்து, தற்படம் எடுத்தனா்.