செங்கம்: மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட பீமாரப்பட்டி ஊராட்சியில் ரூ. 3.70 கோடி மதிப்பீட்டில் பாம்பாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி அவர்கள் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் மு. பன்னீர்செல்வம், கோ. இராமேஷ், பெ.கோவிந்தன் உள்ளிட்ட பொதுமக்கள் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.