தலித் விடுதலை இயக்கம் சார்பில் மனு

57பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், ஒன்றியத்துக்கு உட்பட்ட கடலாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி தமிழ்ச்செல்வன், கடலாடி பஞ்சாயத்து எழுத்தர் நாராயணன் ஆகியோர்கள் கடலாடி கிராமத்தில் போலியான முறையில் நடக்காத பணிகளை நடந்ததாக கணக்கு காட்டி. பல லட்ச ரூபாய் மோசடி செய்து வருகிறார்கள். அவர்களிடம் கடலாடி வார்டு உறுப்பினர்கள் வரவு செலவு கணக்குகள் கேட்டால் சரியான முறையில் காண்பிப்பதில்லை. கிராம சபை கூட்டத்தையும் சரியான முறையில்கூட்டுவதில்லை. மாதாந்திர கூட்டம் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றாமலும். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளையும் செய்து கொடுப்பதில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கூறியும். கடலாடி கிராமத்தில் உள்ள 6-வார்டு உறுப்பினர்கள் அவர்களின் பதவி. ராஜனாமா. கடிதத்தையும் நேற்று தலித் விடுதலை இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் N. A. கிச்சா தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச. கருப்பையா, மாநில இணை பொது செயலாளர் D. கதிர்காமன், நண்பர்கள் சங்கம் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கோ. முருகன், சிபிஐ மாவட்ட செயலாளர் , தலித் விடுதலை இயக்கத்தின் மாவட்ட தலைவர் மற்றும் 100 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி