சென்னையில் பல்வேறு வகையான விதிமீறல்களுக்கு ஸ்பாட் பைன் வசூலிக்கும் சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைக்கு தகுந்த பலனாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு ஸ்பாட் பைன் முறையை கொண்டு வரவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் அதிரடியாக உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.