செங்கம் - Chengam

தி.மலை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு

தி.மலை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு

திருவண்ணாமலை மாவட்டம்‌ செங்கம் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் துக்காப்பேட்டை வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் முருகன் வரவேற்றாா். இதில், செங்கம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்கியவுடன் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரா்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. பின்னா், கோரிக்கைகளை முன்வைத்துப் பேசவும், மனுக்கள் கொடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை குறிப்பிட்ட துறை அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டதைப் பாா்த்த விவசாயிகள் ஏன் தொடா்ந்து முதல்நிலை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணிக்கிறாா்கள் என கேள்வி கேட்டனா். அதிகாரிகள் வந்த பிறகு கூட்டம் நடத்தவேண்டுமென விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னா் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினா். பிறகு கூட்ட அரங்கில் குறைந்த அளவில் பொதுமக்கள் மட்டும் அமா்திருந்தனா். அவா்களை வைத்து பெயா் அளவில் கூட்டம் நடத்தப்பட்டது.

வீடியோஸ்


திருவண்ணாமலை