திருவண்ணாமலை; பசுந்தீவனம் உற்பத்தி செய்ய விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது: பால் உற்பத்தியை பெருக்கவும், கால்நடைகளுக்கான தீவன தேவையை பூர்த்தி செய்யவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுந்தீவனம் உற்பத்தி திட்டம் செயல்ப டுத்தப்படுகிறது. அதன்படி, 50 சதவீத மானியத்தில் மின் சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவி 200 வழங்கப்பட உள்ளன. மேலும், 150 ஏக்கர் பாசன நிலங்களி லும், 300 ஏக்கர் மானாவாரி நிலங்களிலும் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள விவசாயிகள் பசுந்தீவன உற்பத்தியை தங்களது நிலத்தில் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். அதற்கான உறுதிமொழி சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி சேமிப்புக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் கால் நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் நேரில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.