ஆரணியில் அமைச்சரை சந்தித்த எம் பி.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இன்று (அக்.,7) திருவண்ணாமலை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். தரணிவேந்தன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். உடன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.