ஆரணி - Arani

ஆரணி : கா்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்.

ஆரணி : கா்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்.

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையின் சாா்பில் ஆரணி, எஸ். வி. நகரம், தச்சூா் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைந்து ஆரணி காந்தி சாலையில் உள்ள தனியாா் மஹாலில் பழங்குடியினா் கா்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் ஹேம்நாத் தலைமை வகித்தாா். தச்சூா் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பிரகாஷ், ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மருந்து பெட்டகங்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் அசோக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா் சிறிது நேரத்தில் திமுக சாா்பில் ஆரணி நகா்மன்ற தலைவா் ஏ. சி. மணி, ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ். எஸ். அன்பழகன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் துரை மாமது, எஸ். மோகன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு மருத்துவ பெட்டகங்களை வழங்கினாா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை