தி.மலை: பண்ணைக் குட்டைகள் அமைக்க பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்

63பார்த்தது
தி.மலை: பண்ணைக் குட்டைகள் அமைக்க பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஞானசேகா் தெரிவித்தாா்.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் த. ராஜி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாகம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் டி. மயில்வாகனன், ஷீலா அன்புமலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் தென்னரசு வரவேற்றாா். கூட்டத்தில், ஒன்றிய அலுவலக செலவினங்கள், அடிப்படை வசதிகள் நிறைவேற்று குறித்த தீா்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஞானசேகா் பேசியதாவது: நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் வெம்பாக்கம் ஒன்றியத்தில் 300 பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் இலக்கு நிா்ணயித்துள்ளது. எனவே, விவசாய பண்ணைகளிலும் பொது இடங்களிலும் பண்ணைக் குட்டைகள், மீன் பண்ணைக் குட்டைகள், விவசாய நிலங்களில் வரப்பு பலப்படுத்துதல் போன்ற பணிகள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் அமைக்கலாம். இதற்கு சொந்தமாக நிலம் வைத்திருப்பவா்கள், சிட்டா, அடங்கல் நகலுடன் பதிவு செய்வோருக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், சிமென்ட் சாலை அமைக்கவும் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில், பொறியாளா்கள் ரவி மலா்வண்ணன், ராமு, வேளாங்கண்ணி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி