திருவண்ணாமலை மாவட்டம் , மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கொளத்தூர், காட்டக்கானல்லூர், அம்மாபாளையம், கொங்கராம்பட்டு, அழகு சேனை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை ஒன்றிய கழகச் செயலாளர் கொளத்தூர் B. திருமால் ஏற்பாட்டில், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர். S. இராமச்சந்திரன் , முன்னாள் போளூர் சட்டமன்ற உறுப்பினர் L. ஜெயசுதா லட்சுமி காந்தன் ஆகியோர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் ஆரணி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் G. V. கஜேந்திரன் , ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் பாரி P. பாபு, ஆரணி நகரக் கழக செயலாளர் A. அசோக் குமார், மாவட்ட அவைத் தலைவர் A. கோவிந்தராஜன், மாவட்ட கழக பொருளாளர் அரையாளம் M. வேலு, ஆரணி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல் K. சங்கர், கண்ணமங்கலம் பேரூர் கழக செயலாளர் M. பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் A. G. ஆனந்தன், மாவட்ட மாணவர் அணி துணை தலைவர் A. ராஜி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் K. D. குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.