திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சிறும்பூர் ஊராட்சியில் எருது விடும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு துவக்கி வைத்தார். உடன் மாவட்ட பொருளாளர் DA. தட்சிணாமூர்த்தி, ஆரணி தொகுதி பொறுப்பாளர் SS. அன்பழகன், ஆரணி நகர மன்ற தலைவர் AC. மணி, ஒன்றிய செயலாளர்கள் M. சுந்தர் துரைமாமது, S. மோகன், கண்ணமங்கலம் பேரூர் செயலாளர் K. கோவர்த்தனன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.