தாராபுரம் - Dharapuram

திருப்பூர்: 11 ஆண்டுகளுக்குப்பின் குற்றவாளி கைது.. தனிப்படைக்கு எஸ். பி பாராட்டு

திருப்பூர்: 11 ஆண்டுகளுக்குப்பின் குற்றவாளி கைது.. தனிப்படைக்கு எஸ். பி பாராட்டு

தாராபுரம் குருப்ப நாயக்கன்பாளையத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு திருநெல்வேலியைச் சேர்ந்த செல்வி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தாராபுரம் பகுதியில் பானி பூரி கடை நடத்தி வந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் ஷா (வயது 48). இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செல்வியை அடித்து கொன்றுவிட்டு தலைமறைவானார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாராபுரம் காவல்துறையினர் சுரேஷ் ஷாவை தேடி வந்தனர்.  திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்த உத்தரவின் பேரில் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில் சுரேஷ் ஷா டெல்லியில் பதுங்கி பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.  இதை தொடர்ந்து தாராபுரம் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையில் கார்த்திக், மதியழகன், ராமர், பாபுராஜ் ஆகிய போலீசார் அடங்கிய தனிப்படையினர் சுரேஷ் ஷாவை டெல்லியில் கைது செய்து தாராபுரம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా