உடுமலை திருமூர்த்தி அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

60பார்த்தது
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்தி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான பி. ஏ. பி தொகுப்பு அணைகள் சோலையாறு ஆனைமலை ஆறு பரம்பிக்குளம் ஆழியார் அப்பர் ஆளியார் பகுதியில் உள்ள அணைகளில் நீர் இருப்பு உள்ளதால் திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து கணிசமாக உள்ளது.

மேலும் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் நீர் இருப்பு நிலையாக உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை. தற்சமயம் திருமூர்த்தி அணையின் மொத்த 60 அடியில் 52 அடியாகவும் நீர் வரத்து காண்டூர் கால்வாயில் 831 கனடியாக உள்ளது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி