“இந்த ஆண்டு மனிதகுலத்திற்கு மாபெரும் அழிவு ஆண்டாக அமைந்து விட்டது. கடும் சூறாவளிகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் போராடுகின்றனர். தாங்க முடியாத வெப்பத்தால் தொழிலாளர்களும் புனிதப் பயணிகளும் மயங்கி விழுகின்றனர். வறட்சியால் விளைநிலங்கள் தரிசு பூமியாக மாறி, லட்சக்கணக்கான குழந்தைகள் பசியுடன் உள்ளனர். இந்த பேரழிவுகள் எல்லாம் மனிதர்களால் ஏற்பட்ட பருவமாற்றத்தின் விளைவுகள்” என COP29 மாநாட்டில் ஐநா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் பேசியுள்ளார்.