தாராபுரத்தில் கோழிப்பண்ணை விவகாரம் பேச்சுவார்த்தை தோல்வி

68பார்த்தது
குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மானூர் பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான முட்டை கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப்பண்ணையால் துர்நாற்றம் வீசுவதுடன் ஈக்கள் தொந்தரவு காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதம் ஆகிறது. எனவே கோழிப்பண்ணையை மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து தாசில்தார் திரவியம் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் கோழிப்பண்ணை நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முட்டை கோழி பண்ணையை நிரந்தரமாக மூட வேண்டும் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் தங்களிடம் கட்டிட அனுமதி உள்ளது என தெரிவித்தனர். இதனால் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியுற்றது மேலும் 19ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி