திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் அருகே உள்ள கொளத்துபாளையம் அடுத்து உள்ள டி. காளிபாளையம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை சுத்தம் செய்து அங்கு உள்ள பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தருவதற்காக அந்த இடத்தை சுத்தம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு இருந்த அருந்ததியர் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் புறம்போக்கு நிலத்தில் சமுதாய நலக்கூடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்த நிலையில் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கூடாது
என கோரி கரூர் பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 30-நிமிடங்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை அறிந்த தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் விஜய சாரதி மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
சஜினி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியதன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.