தாராபுரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் காளியம்மாள் என்பவர் தோட்டத்தில் 50 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது. அங்கு விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த கன்றுகுட்டி ஒன்று எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்தது. உடனடியாக தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.