வெளியூர்களிலிருந்து வேலைத் தேடி திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் பெண்களைக் குறிவைத்து, சில கும்பல் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவது காவல்துறைக்குத் தெரியவந்துள்ளது. அந்த கும்பல்களைப் பிடிக்க விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார், தாராபுரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தாராபுரம் கண்ணன் நகர் பகுதியில் ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், பெண் காவலர்கள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, பாண்டி என்பவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததை உறுதி செய்து. பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தேனி பாண்டி போலீஸ் வந்ததை அறிந்து அங்கிருந்து தப்பி சென்றார்.
அதன் பிறகு அவரை போலீசார் தேடி வரும் நிலையில் அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட மூன்று பெண்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் 3 பெண்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் இதே கும்பல் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்களா? என செல்போன் கால்களை வைத்து விசாரித்து வருகின்றனர்.