திருச்செந்தூர் கோவில் திருவிழா 4ம் நாள் சப்பரபவனி!

83பார்த்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 24ம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நான்காம் திருவிழாவை இன்று அதிகாலை 4: 00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4. 30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

காலை 7 மணிக்கு சிவன்கோவிலிலிருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்து கிடா வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
பின்னர் மாலை 6. 30 மணிக்கு சிவனகோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து உள்மாட வீதி நான்கிலும், ரதவீதி நான்கிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

ஆவணித் திருவிழாவின் 5-ம் நாளான இன்று (28ம் தேதி) இரவு 7. 30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோயிலில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்திலும் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்மன் வீதிஉலா நடக்கிறது.

தொடர்புடைய செய்தி