தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்.,10) தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக தொடக்கக் கல்வித் துறையின் கட்டமைப்பை அடியோடு சீரழிக்க உள்ள அரசாணை 243 ரத்து செய்யப்பட வேண்டும். பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பள்ளிக்கல்வித்துறை உடனடியாக தங்களது கோரிக்கை நிறைவேற்றாவிட்டாவிட்டால் செப்டம்பர் 30, 31, அக்டோபர் 1ஆம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.