திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா: திருதேரோட்டம்

81பார்த்தது
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடை பெற்றாலும் ஆவணி திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

ஆவணித்திருவிழா நடைபெறும் 12 நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை , மாலை இரு நேரங்களிலும் விதவிதமான வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(செப்.2) காலை 6. 30 மணிக்கு நடைபெற்றது முதலில் விநாயகர் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து ரதாவீதிகளை சுற்றி வந்தடைந்தது பிறகு சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய திருத்தேரை திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருத்தேர் ரதவீதிகள் சுற்றி வலம் வந்தது.

அடுத்து அம்பாள் தேர் எழுந்தருளி ரத வீதிகள் சுற்றி வலம் வந்தது இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் அரோகரா கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆவணி திருவிழா முன்னிட்டு திருச்செந்தூர் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி