திருச்செந்தூர்: பக்தர்களுக்கு ஆசி வழங்கிய கோவில் யானை தெய்வானை

59பார்த்தது
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

இந்த நிலையில் இன்று (செப்.,7) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.
இதற்காக அதிகாலை கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு நீண்ட வரிசையில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து கோவில் முன்பு கோவில் யானை தெய்வானையிடம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசி பெற்று பெறுகின்றனர். சிலர் யானை முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சில குழந்தைகள் யானை மீது ஏறி மகிழ்ந்தனர். தெய்வானை யானை பக்தர்கள் முன்பு தனது தும்பிக்கையே ஆட்டியபடி பக்தர்களை உற்சகப்படுத்தியது. குழந்தைகள் யானைக்கு பழங்கள் காய்கறிகள் கொடுத்து உற்சாகப்படுத்தி ஆசி பெற்று செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி