
தூத்துக்குடி: காவலர் பல்பொருள் அங்காடியில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத்துக்குடியில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் தற்காலிக பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடியில் தற்காலிக பணிக்கு காவல் துறையினரின் வாரிசுதாரர்கள், காவல் ஆளிநர்களின் கணவர் அல்லது மனைவி விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 20 - 40 வயதுக்குள் பட்டவராகவும், குற்றப் பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும். ஆயுதப்படைக் காவலர் பல்பொருள் அங்காடியில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து காவலர் பல்பொருள் அங்காடியில் பிப்ரவரி 27க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 94421 69589 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.