'Its very wrong Bro..' சீமான் டயலாக்கை பேசிய விஜய்

81பார்த்தது
கல்வி நிதி என்ற முக்கியமான விவகாரத்தில் பாசிசமும், பாயாசமும் HASHTAG போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். சென்னையில் தவெக 2ஆம் ஆண்டு விழாவில் பேசிய அவர், மொழி விவகாரத்தில் திமுகவும், பாஜகவும் பேசி வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சோசியல் மீடியாவில் HASHTAG போட்டுவிளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 'வாட் ப்ரோ இட்ஸ் வெரி ராங் ப்ரோ' என ஜாலியாக பேசி முடித்தார். முன்னதாக இதே டயலாக்கை விஜய்யை பார்த்து சீமான் முன்பு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி