கோவில்பட்டி: ரேஷன் கடை ஊழியருக்கு மிரட்டல்: வாலிபர் கைது

55பார்த்தது
கோவில்பட்டி: ரேஷன் கடை ஊழியருக்கு மிரட்டல்: வாலிபர் கைது
கோவில்பட்டியில் ரேஷன் கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் பாஸ்கரன். சம்பவத்தன்று இவர் பாரதி நகர் மேட்டுத் தெருவில் உள்ள அமுதம் நியாயவிலை கடையில் பணியில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த சாஸ்திரி நகரைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் சின்னஜமீன் (33), நியாய விலைக் கடையின் கணக்குகளைக் காண்பிக்குமாறு பாஸ்கரனிடம் தகராறு செய்துள்ளார். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ. 500-ஐப் பறித்துச் சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிந்து சின்னஜமீனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி