கோவில்பட்டி - Kovilpatti

சோலார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

சோலார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

கயத்தாறு அருகே தனியார் சோலார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பெரியகுருவு மகன் காளிமுத்து (30). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கயத்தாறு அருகே மானங்காத்தானில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்திற்கு நண்பர்களுடன் 10 பேர் வேலைக்காக வந்துள்ளார். மானங்காத்தானில் ஒரு அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று (செப்.,20) அவர், தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை நண்பர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன காளிமுத்துவிற்கு, காவேரி (24) என்ற மனைவியும், தரிகாசிணி என்ற 3 வயது மகளும் உள்ளனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా