கோவில்பட்டி - Kovilpatti

கோவில்பட்டி: சேலையில் தீப்பற்றி மூதாட்டி சாவு

கோவில்பட்டி: சேலையில் தீப்பற்றி மூதாட்டி சாவு

கோவில்பட்டியில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றி தீக்காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்தவர் மாடசாமி மனைவி உச்சிமாகாளி (75) இவர் கடந்த 29 ஆம் தேதி காலையில் வீட்டில் கேஸ் அடுப்பை பற்றவைத்தபோது சேலையில் தீப்பிடித்தது. இதில் தீக்காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా