முகத்தை பளபளப்பாக வைக்க உதவும் நெய்
நாம் குளிப்பதற்கு முன்பும் பின்பும் சிறிதளவு முகத்தில் நெய் தடவினால் சருமத்தில் ஈரப்பதம் நிலைத்து நிற்கும். இதனால், சீக்கிரம் தோல் வறட்சி ஆவது நீங்கும். நெய் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படும் என்பதால் ஒட்டும் தன்மை இருக்காது. வறண்ட பகுதிகளில் தினமும் நெய்யை தடவுவது உங்கள் சரும திசுக்களுக்கு ஆழமான ஹைட்ரேஷன் கொடுக்கும். தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கும். தினசரி உணவில் நெய்யைச் சேர்ப்பது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதோடு, அதன் பளபளப்பையும் அதிகரிக்கும்.